Connect with us

நெருக்கமாக நின்று வெளியான வீடியோ.. காதலர் தினத்தில் வைரலான விக்னேஷ் சிவன் நயன் வீடியோ!.

Tamil Cinema News

நெருக்கமாக நின்று வெளியான வீடியோ.. காதலர் தினத்தில் வைரலான விக்னேஷ் சிவன் நயன் வீடியோ!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் இருக்கும் காதல் ஜோடிகளில் மிகப் பிரபலமானவர்களாக இருப்பவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிகள்.

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமாவில் உள்ள மற்ற எந்த காதல் ஜோடிகளை விடவும் தொடர்ந்து தங்களை பெரிதாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

இதற்காக நெட்ஃப்ளிக்ஸ் மூலமாக ஒரு ஆவண படத்தையே உருவாக்கி அவர்கள் வெளியிட்டது அனைவரும் அறிந்த விஷயமே. இந்த நிலையில் அடிக்கடி இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் காதலை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோக்களை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வெளியிட்டு வருவது உண்டு.

தற்சமயம் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆனபோதிலும் கூட காதல் வீடியோக்கள் வெளியிடுவதை அவர்கள் நிறுத்துவதை இல்லை. இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.கே திரைப்படத்தின் வரும் ஒரு பாடலை இருவரும் சேர்ந்து பாடுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.

அந்த வீடியோ இப்பொழுது அதிக வைரலாகி வருகிறது

To Top