Connect with us

திருமணத்துக்கு பிறகாவது ஒழுங்கா இருக்கலாம்.. நயன்தாரா குறித்து வாயை திறந்த பயில்வான் ரங்கநாதன்..!

Tamil Cinema News

திருமணத்துக்கு பிறகாவது ஒழுங்கா இருக்கலாம்.. நயன்தாரா குறித்து வாயை திறந்த பயில்வான் ரங்கநாதன்..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் முக்கியமானவராக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா திருமணம் குறித்த ஆவண திரைப்படம் வெளியானது. அதில் இருந்தே நிறைய பிரச்சனைகளும் உருவாகத் துவங்கியது. நடிகர் தனுஷிடம் சரியான காப்புரிமை வாங்காமல் அவருடைய அவர் தயாரித்த திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக நயன்தாரா மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் நிறைய விஷயங்களை நயன்தாராவும் வெளிப்படையாக பேசத் தொடங்கினார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நயன்தாரா சில விஷயங்களை பேசி இருந்தார்.

பயில்வான் ரங்கநாதன் சொன்ன விஷயம்:

அதில் அவர் பேசும் பொழுது தொடர்ந்து சினிமா குறித்து சில விஷயங்களை அவர் கூறியிருந்தார். முக்கியமாக பிரபுதேவா மீதான அவரது காதல் எப்படி ஏற்பட்டது என்று கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது இரண்டாம் திருமணம் என்பது தமிழ் சினிமாவில் சகஜமான ஒரு விஷயமாக இருந்தது.

அதனால் அதில் ஏதும் எனக்கு தப்பு என்று எதுவும் தெரியவில்லை மேலும் அது வெற்றிகரமானதாகவும் இருந்தது என்று கூறியிருந்தார் நயன்தாரா.

இதுக்குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும் பொழுது யாராவது எச்சில் சாப்பாடு சாப்பிடுவார்களா இந்த காலத்தில் கணவர் சாப்பிட்டதையே மனைவி சாப்பிடுவது கிடையாது நடிகையாக இருந்து கொண்டு நயன்தாரா புதிதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே.

பிரபு தேவா உடனான காதல் முறிவுக்குப் பிறகு இவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் அப்பொழுதாவது அவர் சரியாக இருக்கலாம். ஆனால் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ததிலிருந்து குற்ற உணர்ச்சியோடு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

விக்னேஷ் சிவனை நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் அவர் நன்றாக இருந்திருப்பார் என்றும் கூறுகிறார் அப்படி என்றால் இத்தனை நாட்களாக விக்னேஷ் சிவன் கொடுமையை அனுபவித்து வருகிறாரா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Bigg Boss Update

To Top