Tamil Cinema News
அரசு சொத்தை வாங்க போறேன்.. அமைச்சருக்கே அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா கணவர்..! அட கொடுமையே..!
போடா போடி திரைப்படம் மூலமாக அறிமுகமானாலும் நடிகை நயன்தாராவை காதலிக்க துவங்கிய பிறகு அனைவராலும் அறியப்படும் ஒரு இயக்குனராக மாறியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
அவர் இயக்கிய திரைப்படங்களில் நானும் ரவுடிதான் திரைப்படம் மட்டும் தான் பெரிய வெற்றியை கொடுத்தது. மற்ற திரைப்படங்கள் எல்லாம் ஆவரேஜான வெற்றியை கொடுத்தன அல்லது தோல்வியை கொடுத்த படங்களாக இருந்தன.
ஆனாலும் காதல் கதைகளை படமாக்குவதில் திறமை வாய்ந்த இயக்குனராக விக்னேஷ் சிவன் இருந்து வருகிறார். அதனால் இப்பொழுது எல்லாம் தொடர்ந்து காதல் கதைகளைதான் பாடமாக்கி வருகிறார்.
விக்னேஷ் சிவன் படம்:
அந்த வகையில் தற்சமயம் எல்.ஐ.கே என்கிற திரைப்படத்தை இவர் படமாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். கௌரி கிஷான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக இதில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் நான் தான் அவரின் கணவரான விக்னேஷ் சிவன் அரசு சொத்தை வாங்க நினைத்துள்ளார். அது குறித்து பேசிய அவர் விவகாரம் தற்சமயம் சர்ச்சையாகி வருகிறது. புதுச்சேரி கடற்கரையில் அரசுக்கு சொந்தமான சிகல்ஸ் என்கிற ஒரு ஹோட்டல் உள்ளது.
விக்னேஷ் சிவன் அதிக சொத்து உள்ளவர் என்பதால் அந்த ஹோட்டலை அவர் விலகி கேட்டிருக்கிறார். புதுச்சேரியின் சுற்றுலா துறை அமைச்சரான லட்சுமி நாராயணன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆனால் அரசு சொத்துக்களை விற்பனை செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார் லட்சுமி நாராயணன்.
அதிர்ச்சியான அமைச்சர்:
விலைக்கு தர முடியாது என்றாலும் பரவாயில்லை. ஒப்பந்த அடிப்படையில் ஆவது தர முடியுமா? என்று விக்னேஷ் சிவன் கேட்டிருக்கிறார். ஆனால் அரசுக்கு சொந்தமான இடத்தை அப்படியெல்லாம் யாருக்கும் தர முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார் அமைச்சர் லட்சுமி நாராயணன்.
இந்த நிலையில் அரசு சொத்துக்களை தனியார் ஆள் வாங்க முடியாது என்பது விக்னேஷ் சிவனுக்கு தெரியாதா? என்று இது குறித்து பேசி வருகின்றனர் ரசிகர்கள்.