விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன்! –  புதிய கூட்டணியில் உருவாகும் திரைப்படம்!

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படமான லவ் டுடே திரைப்படத்தை கொடுத்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் இவரே இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தார். லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு வரிசையாக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

Social Media Bar

இந்த நிலையில் அவரது அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன இயக்குனர் விக்னேஷ் சிவன் எதற்கு முன்னாடி அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்க இருந்தார் ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தை விக்னேஷ் சிவனால் இயக்க முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து அடுத்த படத்தை நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்  விக்னேஷ் சிவன். இந்தப் படத்திற்கான வரவேற்பை அதிகரிப்பதற்காக இதில் பிரதீப் ரங்கநாதனுக்கும் முக்கியமான ஒரு கதாபாத்திரம் கொடுக்கலாம் என முடிவு எடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்

அண்மையில் இருவருக்கும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்துள்ளது இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வரும் நாட்களில் விஜய் சேதுபதியும் பிரதீப் ரங்கநாதனும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை எதிர்பார்க்கலாம் என திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.