News
புயல் வர்றதுக்கு முன்னாடி அமைதியாதான் இருக்கும் – அஜித் பற்றி கூறிய விக்னேஷ் சிவன்
வலிமை, நேர்க்கொண்ட பார்வை திரைப்படங்களுக்கு பிறகு அஜித் மீண்டும் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நடித்து வரும் திரைப்படம் துணிவு. வலிமை அளவிற்கு சூட்டிங்கை இழுக்காமல் மிக விரைவாகவே துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

வெகு காலமாக வ வரிசையில் வீரம், விசுவாசம், விவேகம், வேதாளம், வலிமை என பெயர் வைத்து வந்த அஜித் தற்சமயம் அந்த வ வரிசையை விட்டுக்கொடுத்து படத்திற்கு துணிவு என பெயரிட்டுள்ளார். படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்த நிலையில் ஒரு டூர் போனால் நன்றாக இருக்குமே என பைக்கிலேயே ஒரு பயணம் சென்றுள்ளார் அஜித்.
அவர் பயணம் போன சில வீடியோக்களை நாம் அவ்வப்போது சமூக தளங்களில் பார்த்திருக்கலாம். இந்நிலையில் தற்சமயம் அவரது புகைப்படம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் பைக் ரைடிங் உடையில் இருக்கும் அஜித், ஒரு புத்த கோவிலுக்கு அருகில் மாஸாக நின்றுக்கொண்டுள்ளார். அந்த புத்தக்கோவிலை பார்க்கும்போது சீனா, நேபாளம் அல்லது தாய்லாந்து போன்ற பகுதிகளில் அவர் இந்த படத்தை எடுத்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
அந்த படத்தில் அஜித்தின் முகத்தில் உள்ள அமைதியை குறிக்கும் வகையில் விக்னேஷ் சிவன் “புயல் வருவதற்கு முன் அமைதியாய்தான் இருக்கும்” என பதிவிட்டுள்ளார். தற்சமயம் இது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
