Tamil Cinema News
பல வருட பகை..! விஜய் சீமான் சண்டைக்கு பின்னால் உள்ள வரலாறு..!
சமீபத்தில் விஜய் மாநாட்டில் பேசிய விஷயங்கள் அரசியல்வாதிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனெனில் பொதுவாகவே விஜய் மிகவும் அமைதியான நபர் என்பது தான் பலரின் கருத்தாக இருந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் தடாலடியாக பல அரசியல் கட்சிகளை விமர்சித்து மாநாட்டில் பேசியிருந்தார்.
அதில் திமுகவையும் நாம் தமிழர் கட்சியையும் அதிகமாகவே விமர்சித்து இருந்தார் விஜய். இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீமானும் பேசியிருந்தார். ஆனால் இந்த பிரச்சனை விஜய்க்கும் சீமானுக்கும் இப்பொழுது உருவானது கிடையாது.
விஜய் சீமான் பிரச்சனை:
இது பல வருடங்களுக்கு முன்பே உருவான பிரச்சனையாகும். விஜய்யை வைத்து சீமான் பகலவன் என்கிற திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய்யும் நடிப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் பல நாட்கள் கால் சீட் கொடுக்காமல் சீமானை அலைக்கழித்து வந்தார் விஜய். இதனால் அப்பொழுதே விஜயின் மீது கோபமாக இருந்தார் சீமான். அதன் பிறகு பலமுறை விஜயுடன் நட்பாக போவதற்கு சீமான் நினைத்தும் கூட அதற்கு விஜய் அனுமதிக்கவில்லை என்று இது குறித்து கூறியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் அந்தணன்.
எனவே இதுதான் சீமான் மற்றும் விஜயின் இப்போதைய நிலை. அதனால் இதுதான் இப்பொழுது சீமான் விஜயை எதிரியாக பார்ப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்
