News
ரோட்டில் பரோட்டா போட்ட பையனுக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் ஆண்டனி!. அந்த மனசுதான் கடவுள்!..
தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிக பட்டாளத்தை கொண்டிருக்காவிட்டாலும் பொது ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றவர் நடிகர் விஜய் ஆண்டனி. வெறும் சவுண்ட் இஞ்சினியராக சினிமாவிற்கு வந்து இசையமைப்பாளராகி இப்போது தொடர்ந்து நடிகராக நடித்து வருகிறார்.
இவரது திரைப்படங்களின் கதை அமைப்புகள் சாதரண கமர்சியல் திரைப்படங்கள் போல் இல்லாமல் மாறுப்பட்டு இருப்பதால் தமிழ் ரசிகர் வட்டாரத்தில் இவருக்கு நல்ல பெயர் உள்ளது.
மேலும் இவர் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்து வருகிறார். கொரோனா காலக்கட்டத்தில் படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டிருந்தப்போதே 25 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.
அதே போல புற்றுநோய் சிகிச்சைக்கு பலருக்கும் நிதி உதவி செய்து வருகிறார். ஒருமுறை ஹோட்டலில் வேலை செய்யும் பையன் ஒருவன் பாடலாசிரியர் ஆவதற்காக சினிமாவில் முயற்சித்து வந்துள்ளான். இந்த செய்தி விஜய் ஆண்டனிக்கு தெரியவே அவனை அழைத்து வர சொல்லியுள்ளனர்.
அவன் விஜய் ஆண்டனியை பார்க்க செல்லும்போது பரோட்டாவும் சிக்கன் க்ரேவியும் செய்து கொண்டு சென்றுள்ளான். அதை சாப்பிட்ட விஜய் ஆண்டனிக்கு அவன் பாடல்களை விட அவன் சமையல் சிறப்பாக இருக்கிறது என்பது தெரிந்துள்ளது. அவனது திறமையை அறிந்த விஜய் ஆண்டனி அவனுக்கு ஒரு ஹோட்டலை கட்டி தந்துள்ளார்.
இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறியுள்ளார்.
