தேறுமா? தேறாதா… எப்படியிருக்கு கிங்டம் திரைப்படம்.. விமர்சனம்..!

தமிழ் சினிமாவில் காலம்காலமாக இருக்கும் ஒரே மாதிரியான கதைகளத்தை கொண்டு வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் கிங்டம் திரைப்படம்.

கதைப்படி கதாநாயகனுக்கு ஒரு உளவாளியாக செல்வதற்கான வேலை வருகிறது. கான்ஸ்டபிள் ஆக இருக்கும் அவர் இலங்கையில் இருக்கும் சிறைச்சாலைக்கு ஓர் உளவாளியாக செல்கிறார்.

அங்கே ஒரு முக்கியமான ரவுடியையும் அவனது கூட்டத்தையும் பற்றிய தகவல்களை அறிய வேண்டும் என்பதுதான் விஜய் தேவரகொண்டாவிற்கு கொடுக்கப்படும் வேலையாக இருக்கிறது.

அங்கே சென்ற பிறகுதான் விஜய் தேவரகொண்டாவிற்கு அங்கே இருக்கும் அந்த பெரிய ரவுடி அவருடைய அண்ணன் என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த ரவுடி கூட்டத்திற்கு பின்னால் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது எனவும் தெரிகிறது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து இந்த ரவுடி கூட்டம் இருந்து வருகிறது எனவே அது குறித்த கதை பிறகு செல்கிறது. ஆனாலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தை இயக்கி இருக்கும் Gowtham Tinnanuri.

ஏற்கனவே ஜெர்ஸி என்கிற திரைப்படத்தை இயக்கி அதன் மூலம் அதிகமாக வரவேற்பை பெற்ற இயக்குனராக இவர் இருந்து வருகிறார்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.