பீஸ்ட் ஹிட்னு நம்பலைல.. இப்ப தளபதியே சொல்லிட்டார்!

Beast-3

விஜய் நடித்து நெல்சன் இயக்கி சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Beast

இந்த படம் கடந்த 13ம் தேதி வெளியான நிலையில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் பீஸ்ட் வெளியான மறுநாளே கேஜிஎஃப்2 வெளியானதால் இரண்டில் எது அதிக வசூல் என போட்டி நிலவியது.

ரெண்டு வாரம் கழிச்சும் கேஜிஎஃப் சாதனை! – மிரண்டு போன இந்திய சினிமா!

உலகளாவிய வசூலில் கேஜிஎஃப் ஸ்கோர் செய்திருந்தாலும் தமிழ்நாட்டில் பீஸ்ட் அதிகமான வசூலை குவித்துள்ளது. அதிகமான லாபத்தை கொடுத்து வெற்றி படமாக பீஸ்ட் உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சொன்னாலும் சிலர் நம்பாமல் இருந்தனர்.

இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினரை அழைத்த நடிகர் விஜய் அவர்களுக்கு சிறப்பு விருந்து அளித்து பாராட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை இயக்குனர் நெல்சனும் ஷேர் செய்துள்ளார். தளபதியே சொல்லிட்டார் பீஸ்ட் ஹிட்டுன்னு இப்ப நம்புறீங்களா என விஜய் ரசிகர்கள் இதை சோசியல் மீடியாக்களில் வைரலாக்கியுள்ளனர்.

ரஜினிக்கு போன கதையை தட்டித்தூக்கிய தளபதி? – இயக்குனர் இவர்தான்..!

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.