News
வேற வழி இல்ல.. த்ரிஷா எடுத்த முடிவு! பரிதாபப்படும் ரசிகர்கள்!
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. கடந்த 10 ஆண்டுகாலமாக தொடர்ந்து நடித்து வந்தவர் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்துள்ள த்ரிஷா, இதற்கு பிறகு அதிகமான பட வாய்ப்புகள் வரலாம் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.
த்ரிஷாவோடு வந்த மற்ற நடிகைகள் எல்லாம் வயதாகிவிட்டது தெரியும்படி ஆகி விட்ட நிலையிலும் த்ரிஷா மட்டும் அதே இளமையோடு தொடர்ந்து உலா வருகிறார். இதனால் இளம் ஹீரோக்களோடு நடிக்கும் வாய்ப்புகள் த்ரிஷா வசம் வருகின்றன.

தற்போது அவ்வாறாக குக் வித் கோமாளியில் பங்கேற்ற நடிகர் சந்தோஷ் முக்கிய ரோலில் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம். மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை அருண் வசீகரன் இயக்குகிறார்.

என்னதான் இளம் நடிகர்களோடு இப்போதும் ஜோடி சேரும் அளவு இளமையாக இருந்தாலும் பெரிய ஹீரோக்கள் படங்களில் த்ரிஷாவுக்கு இடம் கிடைக்காதது ஒரு குறையாகவே இருந்து வருகிறது.
