பயோபிக் தலைவனின் அடுத்த எண்ட்ரி – கோலிவுட் ரீமேக்கில் நடிக்கும் அக்‌ஷே


இந்தியாவில் அதிகமாக பலருக்கும் தெரிந்த ஒரு பாலிவுட் நடிகர்தான் அக்‌ஷே குமார். பாலிவுட்டில் பிரபலமான நட்சத்திரமான இவர் தற்சமயம் அத்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் கோலிவுட் நடிகர் தனுஷோடு இணைந்து நடித்திருந்தார். இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் கூட பயோ பிக் திரைப்படங்களுக்கு பெயர் பெற்றவர் நடிகர் அக்‌ஷே குமார். நிஜ மனிதர்களின் வாழ்க்க்கையை கொண்டு படமாக்கப்படும் திரைப்படங்களில் அதிகப்பட்சம் அக்‌ஷேகுமார் நடிப்பதால் இவருக்கு இந்த பெயர் வந்தது.


பேட்மேன், ஏர்லிஃப்ட், ரஸ்டோம் இன்னும் பல படங்கள் இந்த லிஸ்டில் அடக்கம். இந்த நிலையில் தற்சமயம் தமிழில் சூர்யா நடித்து வெளிவந்த சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் எடுக்க உள்ளனர். அதில் அக்‌ஷே குமார் நடிக்க உள்ளார் என அதிகாரபூர்வ தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே பயோபிக் மாஸ்டர் என அழைக்கப்படும் அக்‌ஷே குமாருக்கு மீண்டும் ஒரு பயோபிக் திரைப்படமே அமைந்திருப்பது எதார்ச்சையா. இல்லை அக்‌ஷே இப்படியான பயோ பிக் திரைப்படங்களை தேடி தேடி நடிக்கிறாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இந்த படத்தை தமிழில் சூரரை போற்று படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா அவர்களே இந்தியிலும் இயக்க உள்ளார். இந்த படத்தை சூர்யாவின் டூடி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இந்த செய்தியை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ளது. எனவே சூரரை போற்று படத்தின் இந்தி வெர்சனை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம்.

Refresh