News
இளம் கமலுக்காக காத்திருக்கும் சலாமியா நாட்டு இளவரசி! – வேற லெவல் போகும் விக்ரம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷன்ல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நீண்ட காலமாக கமல்ஹாசன் படம் ஏதும் வராமல் இருந்த நிலையில் ஜூன் 3ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கமலை இளமையாக்கிய டெக்னாலஜி; அலண்டு போன லோகேஷ்!
இந்த படத்தில் கமல்ஹாசன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என கூறப்பட்ட நிலையில் படத்தின் டைட்டிலும் விக்ரம் என இருப்பதால், கமல் நடித்து 1986ல் வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இது இருக்குமோ என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இரண்டிற்கும் சம்பந்தம் இல்லை. இரண்டும் வேறு வேறு கதைகள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் படத்தின் ஒரு ப்ளாஷ்பேக் காட்சியில் மட்டும் பழைய விக்ரம் படத்தில் வரும் இளமையான கமலை போல தோற்றத்தில் நம்மவர் வருகிறாராம். அவரை இளமையாக காட்ட புதுவிதமான டெக்னாலஜிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1986ல் வெளியான விக்ரம் படத்தில் சலாமியா நாட்டு இளவரசியாக வருபவர் பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா. தற்போது இந்த விக்ரம் படத்தில் இளமையாக கமல் வரவிருப்பதை காண ஆவலாக உள்ளதாக அவர் சொல்லி இருக்கிறாராம். நாளுக்கு நாள் இந்த இளமை கமல் விவகாரம் ட்ரெண்டாகி வரும் நிலையில் ரசிகர்களும் அந்த காட்சி எப்படி இருக்கும் என பார்க்க தீவிரமாக காத்துக் கிடக்கிறார்களாம்.
ராஜமௌலிக்கு சவால் விடும் பொன்னியின் செல்வன்! – சுதா கொங்கரா சர்ப்ரைஸ்!
