ரெண்டு வாரம் கழிச்சும் கேஜிஎஃப் சாதனை! – மிரண்டு போன இந்திய சினிமா!

கன்னட நடிகர் யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கிய படம் கேஜிஎஃப் சாப்ட்டர் 2. முதல் பாகம் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பை தொடர்ந்து இந்த படம் ரிலீஸானதும் பெரும் ஹிட் அடித்துள்ளது.

KGF 2

கடந்த 14ம் தேதி ரிலீஸான நிலையில் அந்த வார இறுதி வரை படம் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் ஃபுல்லானது. டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். இதனால் வசூலிலும் கோடிக் கணக்கில் ராக்கி பாய் வாரிக் குவித்தார்

ரஜினிக்கு போன கதையை தட்டித்தூக்கிய தளபதி? 

தொடர்ந்து தற்போதைய இரண்டாவது வாரம் வரை கேஜிஎஃப் 2 அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த 22,23,24 ஆகிய மூன்று நாட்களும் இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ நகரங்களிலும் கேஜிஎஃப் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

Sultana

இரண்டு வாரமாக ஒரே படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடுவதும், வசூலில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருப்பதும் அனைத்து மொழி சினிமா வட்டாரத்தையும் வாயடைக்க செய்துள்ளது.

Refresh