ரஜினிக்கு போன கதையை தட்டித்தூக்கிய தளபதி? – இயக்குனர் இவர்தான்..!

விஜய் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான படம் பீஸ்ட். சமீபத்தில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றிருந்தாலும், பெரும்பாலும் பலர் கலவையான விமர்சனங்களை அளித்துள்ளனர்.

Beast

இந்நிலையில் நடிகர் விஜய் தனது அடுத்த படமான தளபதி 66ல் பிஸியாகி உள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் நிலையில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தொடங்க உள்ளது. இந்நிலையில் அதற்கடுத்து தனது 67வது படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைவது குறித்து விஜய் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Vikram Poster

முன்னதாக கமலின் ராஜ்கமல் நிறுவனத்திற்காக ரஜினிக்கு ஒரு கதை சொல்லியிருந்தார் லோகேஷ். ஆனால் சில பல காரணங்களால் அந்த ப்ரோஜெக்ட் முடிவு செய்யப்படவில்லை. அதனால் கமல் நடிப்பில் விக்ரம் பணிகளை லோகேஷ் மேற்கொண்டார்.

தற்போது விஜய் கதை கேட்ட நிலையில் ரஜினிக்கு எழுதிய கதையை விஜய்யை வைத்து இயக்கலாம் என லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

KGF 2 பாத்து பீதியான புஷ்பா டீம்! படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்!

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh