அதுக்கு பிறகு பள்ளிக்கூடமே போகல..! – அம்மு அபிராமிக்கு நிகழ்ந்த சோகம்!

தமிழ் சினிமாவில் அசுரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது பிரபலமாக உள்ளவர் அம்மு அபிராமி.

மேலும் சில படங்களில் நடித்து வரும் அம்மு அபிராமி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்று வருகிறார். இந்த ஷோவுக்கு வந்த பிறகு இவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

இந்த படங்களை தனியா பார்த்திடாதீங்க – பயங்கரமான 10 பேய் படங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளுக்கு இணையாக காமெடி செய்து கொண்டு சமையலிலும் அசத்தி வரும் அம்மு அபிராமி தனது பள்ளி காலங்கள் குறித்த சில விஷயங்களை நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

அதில் அவர் “11ம் வகுப்பு முடித்த பிறகு பள்ளிக்கே போகவில்லை. வீட்டிலிருந்தபடியேதான் படித்தேன். அதனால் நண்பர்களும் நிறைய கிடையாது. சின்ன வட்டம்தான். குக் வித் கோமாளி வந்த பிறகுதான் இங்குள்ளவர்களோடு நண்பர்களோடு இருப்பது போல மகிச்சியாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

சிறுவயதிலேயே நிறைய நண்பர்கள் தனக்கு இல்லாதது குறித்து அபிராமி சொன்னதை கேட்டதும் மற்ற போட்டியாளர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Refresh