தினமும் அதை ரசிகர்களுக்கு பண்ண நினைச்ச விஜய்!.. ஆனால் முதல் நாளே தடியடி சம்பவத்தில் முடிந்தது!..

Thalapathy Vijay: விஜய் அரசியலுக்கு வந்தது முதலே தொடர்ந்து பத்திரிக்கைகளிலும் செய்திகளிலும் அவரை குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் விஜய்யின் நடவடிக்கைகளிலேயே பெரும் மாற்றத்தை பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் படப்பிடிப்பில் அந்தளவிற்கு ரசிகர்களை கண்டுக்கொள்ளாத விஜய் தற்சமயம் தினசரி ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

பாண்டிச்சேரியில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தப்போது விஜய் அங்கு ரசிகர்களை ஒன்றுக்கூட்டி சிறிது நேரம் அவர்களுக்கு தரிசனம் காட்டினார். இதே போல தினசரி இனி ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்க முடிவு செய்தார் விஜய்.

Social Media Bar

ஆனால் அதில் முதல் நாளே பிரச்சனை ஏற்பட்டது. விஜய்யை சந்திப்பதற்காக பொது இடத்தில் ஏற்பாடு செய்தால் அங்கு வாகனங்கள் எல்லாம் போக முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலருக்கும் வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

எனவே இது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து அன்றே போலீஸ் தடியடி நடத்தியதை அடுத்து அன்று பிரச்சனையானது. இதனையடுத்து தினசரி சந்திப்பு நடத்த நினைத்த விஜய்க்கு இது ஒரு பின்னடைவாக அமைந்தது. இருந்தாலும் குறைவான ரசிகர்களை தினசரி சந்தித்து வருகிறார் விஜய்.