News
சூடு பிடிக்கும் அரசியல் களம்.. த.வெ.க தலைவர் விஜய்யின் திடீர் முடிவு.. ஆடிப்போன அரசியல் கட்சிகள்..!
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிவிட்டார் எனக் கூறியது முதலே தமிழ்நாடு முழுக்கவும் அது அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் சினிமாவில் இவ்வளவு பெரிய மார்க்கெட் இருக்கும் பொழுது எந்த ஒரு நடிகரும் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறேன் என்று கூற மாட்டார்கள். அப்படி இருக்கும் பொழுது நடிகர் விஜய் துணிச்சலாக சினிமாவை விட்டு அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியிருப்பது பலருக்குமே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் கட்சி துவங்குவதாக கூறிய விஜய் அதற்கு பிறகு பெரிதாக எதுவும் செய்யாமல் இருந்தார். பிறகு திடீரென்று அவரது கட்சி கொடியை அறிமுகப்படுத்தி இருந்தார்.
அரசியலில் விஜய்யின் அடுத்த நகர்வு:
தொடர்ந்து அடுத்து அவர் கட்சிக்கான மாநாட்டை நடத்தும் பணியில் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் கட்சி மாநாடு நடக்க இருப்பதால் தொடர்ந்து 236 தொகுதிக்குமான வேட்பாளர்களை நியமித்திருக்கிறார் நடிகரும் தா.வெ.க கட்சியின் தலைவருமான விஜய்.
இது ஒரு பெரிய அரசியல் திருப்புமுனையாகும். விஜய் என்ன செய்து விடப் போகிறார் என்று யோசித்து வந்த அரசியல் கட்சிகளுக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. சில நாட்களிலேயே 236 தொகுதிகளுக்கும் தேவையான வேட்பாளர்களை நியமித்து விட்டார் என்றால் விஜயின் அரசியல் களம் எவ்வளவு வேகமாக இருக்கும் என்பது தான் இப்பொழுது மக்களிடமும் பேச்சாக இருக்கிறது.
