தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். பெரும்பாலும் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றால் அது வெற்றி படங்கள் என்றுதான் கூற வேண்டும்
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக விஜய் இருந்து வருகிறார். கதை தேர்ந்தெடுப்புகளை பொறுத்தவரை நிறைய பெரிய நடிகர்கள் தவறவிட்ட கதைகள் தமிழ் சினிமாவில் நிறைய உண்டு.
அவர்கள் தவற விட்டு அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்கள் வெற்றியும் கொடுத்திருக்கின்றன. அதனால்தான் இப்பொழுது வரை தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களால் கூட எந்த மாதிரியான திரைப்படம் வெற்றியை கொடுக்கும் என்பதை அனுமானிக்க முடிவதில்லை.

இந்த நிலையில் ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. லிங்குசாமி இயக்கத்தில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்களில் சண்டக்கோழி திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தை இயக்கும் பொழுது முதலில் இதன் கதையை நடிகர் விஜய்யிடம் தான் கூறியிருக்கிறார் லிங்குசாமி. அதைக் கேட்ட விஜய் கதாநாயகனின் கதாபாத்திரத்தை விட அவரது அப்பா கதாபாத்திரத்திற்கு மாஸ் காட்சிகள் அதிகமாக இருக்கின்றன.
அதனை மாற்றி அமைத்தால் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த காட்சியை மாற்றி அமைக்க முடியாது என்று கூறிய லிங்கு சாமி அதில் விஷால் நடித்த வைத்தார். அதற்கு பிறகு படம் பெரிய வெற்றியை கொடுத்தது.
பிறகு விஜய் லிங்குசாமியை சந்திக்கும் பொழுது விஷால்தான் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று இருக்கிறது அவர் நன்றாக நடிக்கிறார் என்று விஷாலை பாராட்டிவிட்டு சென்று இருக்கிறார். இந்த விஷயத்தை லிங்குசாமி ஒரு பேட்டியில் பதிந்து இருக்கிறார்.
 
			 
			








