Connect with us

விஜய் துவங்கும் டிவி சேனலுக்கு பின்னால் உள்ள காரணம்..! மாநாட்டில் செஞ்சதுக்கு பலி தீர்க்கிறார் போல.. ஆடிப்போன அரசியல் களம்..!

vijay

Tamil Cinema News

விஜய் துவங்கும் டிவி சேனலுக்கு பின்னால் உள்ள காரணம்..! மாநாட்டில் செஞ்சதுக்கு பலி தீர்க்கிறார் போல.. ஆடிப்போன அரசியல் களம்..!

Social Media Bar

நடிகர் விஜய் தற்சமயம் நடிகர் என்பதிலிருந்து மாறி அரசியல் கட்சி தலைவராக மாறி இருக்கிறார். அவர் உருவாக்கிய தமிழக வெற்றி கழகம் கட்சிக்கான மாநாடு சமீபத்தில் நடந்தது.

அனைவரும் எதிர்பார்க்காத வகையில் அதில் விஜய்யின் பேச்சுக்கள் இருந்தன. இதனை தொடர்ந்து ஒரு பக்கம் அரசியல்வாதிகள் சிலர் இதற்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் இதற்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் அடுத்த அரசியல் நகர்வாக நடிகர் விஜய் டிவி சேனல் ஒன்றை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் புது திட்டம்:

இதற்காக புதிதாக அவர் எந்த டிவி சேனலையும் பதியவில்லை. மாறாக ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் ஏதாவது ஒரு டிவி சேனலை வாங்கி இவர் நடத்தப் போகிறார் என்று கூறப்படுகிறது.

vijay

vijay

வாகை டிவி என்று இவர் இதற்கு பெயர் வைக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. எதற்கு விஜய் இவ்வளவு அவசரமாக இப்படி ஒரு டிவி சேனலை உருவாக்குகிறார் என்கிற கேள்வி ஒரு பக்கம் இருக்கிறது.

ஆனால் இது குறித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு இருக்கிறது. அதாவது மாநாடு நடந்த பொழுது காலையிலிருந்து மாநாடு குறித்து தவறான செய்திகளை தொடர்ந்து பல செய்தி சேனல்கள் ஒளிபரப்பி வந்தன.

எனவே தனது கட்சி குறித்த உண்மையான விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகவே விஜய் உடனடியாக டிவி சேனல் துவங்குவது குறித்து ஆர்வம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் விஜய் தரப்பிலிருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.

 

To Top