News
த்ரிஷாவிற்கு விஜய் வாங்கி தந்த வைர நெக்லஸ்.. விலையை கேட்டா ஆடி போய்டுவீங்க..!
கடந்த ஒரு வார காலமாக நடிகை திரிஷா விஜய் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் கடந்த 50வது பிறந்த நாளை முன்னிட்டு விஜய்யுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை திரிஷா வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தில் ஒரு லிப்டில் விஜய்யும் திரிஷாவும் இருப்பது போல் இருந்தது. பலரும் ஆரம்பத்தில் இதை வெளிநாட்டில் எடுத்த புகைப்படங்கள் என்று தான் நினைத்து வந்தனர். ஆனால் அது உண்மை இல்லை விஜய் அலுவலகம் எங்கு இருக்கிறதோ அங்குதான் திரிஷாவும் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி வைத்திருக்கிறார்.
பிரபலமான புகைப்படங்கள்:
அங்குதான் இவர்கள் இருவரும் இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர் என்று ஒரு செய்தி பரவியது. அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலில இருந்து வருகின்றனர் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன. ஏனெனில் ஆரம்பத்திலிருந்து கில்லி ஆதி மாதிரியான திரைப்படங்களில் நடிக்கும் பொழுதே திரிஷாவிற்கும் விஜய்க்கும் காதல் இருந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தது.

அதை மீண்டும் பேசும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் இன்னும் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்து இருந்தார். திரிஷாவின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சிக்கிய நெக்லஸ்:
அப்பொழுது கணக்கில் வராத பணம் நகைகள் அவர்களுக்கு சிக்கியது அது குறித்து அவர்கள் கேள்விகளை கேட்டு வந்தனர். அதில் குறிப்பாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு வைர நெக்லஸ் வருவாய் துறையினரால் கைப்பற்றப்பட்டது.
அந்த நெக்லஸ் எப்படி இவருக்கு வந்தது அதற்கு எந்தவித ரசிதும் இல்லையே என்று கேட்டிருக்கின்றனர் வருமானவரி துறையினர். அப்பொழுது பதில் அளித்த திரிஷா அது விஜய் எனக்கு பரிசாக கொடுத்தது என்று கூறி இருக்கிறார்.

இந்த விஷயத்தை தமிழா தமிழா பாண்டியன் பேட்டியில் தெரிவித்திருந்தார் விஜய் திரிஷாவிற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நெக்லஸ் வழங்குகிறார் என்றால் அது சாதாரண உறவாக இருக்குமா என்று இது குறித்து மறுபடியும் கேள்விகள் எழ தொடங்கி இருக்கின்றன.
