ஷங்கர் விஜய்க்கு சொன்ன கதை! –  விஜய் மறுத்ததால் பழி வாங்கிய ஷங்கர்!

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். தமிழில் ஷங்கர் இயக்கும் அனைத்து படங்களும் பெரும் ஹிட் அடிக்கும் என்பதால் அவரது திரைப்படங்களுக்கு எப்போதுவுமே ஒரு தனி மவுசு உண்டு.

Social Media Bar

ஷங்கர் இயக்கி 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜூன்ஸ். இந்த படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் ஒரு பாடலுக்காக உலகின் ஏழு அதிசயங்களையும் படம் பிடித்தார் ஷங்கர்.

முதலில் இந்த படத்திற்கு ஷங்கர் நடிகர் விஜய்யைதான் தேர்வு செய்தார். ஆனால் படத்தின் கதையை கேட்ட விஜய், இந்த படத்தில் நடிக்க தனக்கு சம்மதமில்லை என கூறிவிட்டார். இதனால் மிகவும் வருத்தமாகிவிட்டார் ஷங்கர். ஏனெனில் முன்னணி கதாநாயகர்கள் எப்போதும் ஷங்கரின் படம் என்றாலே நடிக்க ஒப்புக்கொள்வார்கள்.

இந்த நிலையில்தான் நடிகர் பிரசாந்த் சினிமா மார்க்கெட்டில் கொஞ்சம் கீழே இருந்தார். எனவே சின்ன பட்ஜெட் படங்களில் இவர் நடித்து வந்தார். iந்த சமயத்தில் அவரை அணுகிய ஷங்கர், ஜீன்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு அழைப்பு விடுத்தார்.

அந்த சமயத்தில் சின்ன பட்ஜெட்களில் ஏழு படங்களில் நடிப்பதற்கு பிரசாந்திற்கு வாய்ப்புகள் இருந்தது, ஆனால் அதை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு ஜீன்ஸ் திரைப்படத்தில் நடித்தார் பிரசாந்த். அந்த படம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது. நடிகர் பிரசாந்த்க்கும் அவரது மார்க்கெட்டை பிடித்து கொடுத்தது இந்த படம்.