இனிமே அந்த மாதிரி நடிக்கிறதுக்கு கூப்பிடாதீங்க… மூஞ்சுல அடிச்ச மாதிரி கூறிய விஜய் சேதுபதி..!
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என்று இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் விஜய் சேதுபதி. பெரும்பாலும் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.
ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றாலே அதற்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது. ஆனால் அதனை பலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
விஜய் சேதுபதியின் முடிவு:
இந்த நிலையில் நிறைய திரைப்படங்களில் விஜய் சேதுபதி நட்பின் காரணமாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து நடித்து கொடுத்துவிட்டு சென்றிருப்பார்.

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது இனி அந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து தருவதற்கு நான் தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார். நட்பின் காரணமாக சிலருக்கு சின்ன கதாபாத்திரங்களில் என்னிடம் நடிக்க கேட்கும்பொழுது நான் அதற்கு ஒப்புக்கொள்வது உண்டு.
இதான் முடிவு:
ஆனால் அவர்களுக்கு நடித்துக் கொடுப்பதின் அருமையை தெரியாதவர்களுக்கு அதை செய்வதில் பயனில்லை என்று நினைக்கிறேன். மேலும் அவர்கள் என்னை ஒரு சின்ன காட்சியில் நடிக்க வைத்து விட்டு படத்தை வியாபாரம் செய்யும் பொழுது படத்தில் முக்கால்வாசி காட்சிகளுக்கு விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்று கூறி வியாபாரம் செய்கின்றனர்.

இது பெரும் தவறு அதனால் இனி எந்த ஒரு திரைப்படத்திலும் சின்ன கதாபாத்திரங்களில் நான் நடிக்க மாட்டேன் நடித்தால் கதாநாயகனாக நடிப்பேன் இல்லை என்றால் வில்லனாக நடிப்பேன் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.