ப்ரோமோஷனுக்கே எல்லா காசும் போச்சு!.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்!.. எல்லாம் விஜய் சேதுபதி செஞ்ச வேலைதான்..

பொதுவாகவே தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு ஐம்பதாவது திரைப்படம் என்பது அவ்வளவாக கை கொடுப்பது கிடையாது. விஜயகாந்த் மாதிரியான ஒரு சில நடிகர்களுக்கு மட்டும்தான் 50-வது படம் பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் தற்சமயம் விஜய் சேதுபதி நடித்து வரும் மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாகும். விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தன்னுடைய புகழை காப்பாற்றுவதற்காக இந்த திரைப்படத்தை எப்படியாவது பெரும் வெற்றி படமாக மாற்றிவிட வேண்டும் என்று நினைத்து வருகிறார்.

vijay-sethupathi
vijay-sethupathi
Social Media Bar

அதற்காக நிறைய விஷயங்களை செய்து வருகிறார். திரைப்படம் துவங்கிய பொழுது அதில் நிறைய பாலிவுட் நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து தயாரிப்பாளருக்கு பண செலவை அதிகப்படுத்தி விட்டார் விஜய் சேதுபதி.

செலவு வைத்த விஜய் சேதுபதி:

அதனை தொடர்ந்து தற்சமயம் படத்தின் ப்ரோமோஷனுக்காக தயாரிப்பாளரிடம் அதிகமாக செலவு வைத்து வருகிறார். குரங்கு பொம்மை படத்தின் இயக்குனரான நித்தின் ஸ்வாமிநாதன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

வருகிற 14-ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் தற்சமயம் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடத்தில் படத்தை பிரமோஷன் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

மூன்று நிமிடம் புர்ஜ் கலிப்பாவில் படத்தின் டீசரை திரையிடுவதற்கு 75 லட்சம் ரூபாய் கட்ட வேண்டுமாம். இந்த நிலையில் 10 நிமிடங்கள் வரை அதை திரையிடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் அதே சமயம் விஜய் சேதுபதி அவருடைய சம்பள பணத்திலிருந்து கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ளவில்லையாம்.