10 நாளில் இத்தனை கோடியா… பெரிய நடிகர்களுக்கு டஃப் கொடுத்த மகாராஜா படம்..!

தமிழில் தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகாராஜா. இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதற்கு முன்பு நித்திலன் குரங்கு பொம்மை என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அந்த திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. ஆனால் சரியான விளம்பரம் கிடைக்காத காரணத்தினால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.

லோ பட்ஜெட் திரைப்படம்:

இந்த நிலையில் மகாராஜா திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக அமைந்திருப்பதால் அந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்புகள் இருந்து வந்தன. இந்த திரைப்படம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.

vijay sethupathi maharaja
vijay sethupathi maharaja
Social Media Bar

இருந்தாலும் இதில் நிறைய முக்கிய நடிகர்களை நடிக்க வைத்த காரணத்தினால் அதிகமாக செலவாகிவிட்டது என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் குறைந்த பட்ஜெட்டில்தான் எடுக்க நினைத்திருக்கிறார்.

ஆனால் விஜய் சேதுபதிதான் திரைப்படத்தின் வரவேற்பை அதிகரிப்பதற்காக அதில் பெரிய நடிகர்கள் பலரை நடிக்க வைத்து விட்டார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 10 நாள் ஆகிவிட்டது.

10 நாள் வசூல்:

இதுவரையில் உலக அளவில் இந்த திரைப்படம் 76 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பு செலவோடு ஒப்பிடும் பொழுது இது பெரிய தொகை இல்லை என்றும் கூறப்படுகிறது.

maharaja
maharaja

ஆனால் 150 கோடியை இந்த திரைப்படம் தொட்டுவிட்டால் அது இந்த திரைப்படத்திற்கு பெரிய வெற்றி என்று கூறப்படுகிறது  படம் வெளியாகி 10 நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் நிச்சயமாக இந்த வசூலை அது தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.