Connect with us

அந்த நாவலின் காபிதான் இந்த படம்!.. மேரி கிருஸ்மஸ் திரைப்பட விமர்சனம்!..

merry christmas movie

Movie Reviews

அந்த நாவலின் காபிதான் இந்த படம்!.. மேரி கிருஸ்மஸ் திரைப்பட விமர்சனம்!..

Social Media Bar

Merry Christmas movie Review : ஆங்கிலத்தில் அகதா கிறிஸ்டி என்கிற பிரபலமான ஒரு எழுத்தாளர் இருக்கிறார் அவருடைய நாவல்கள் பலவும் பிறகு திரைப்படம் ஆகியது. திரில்லர் கிரைம் நாவல்கள் எழுதுவதில் பிரபலமானவர் அகதா கிறிஸ்டி.

அப்படி அகதா கிறிஸ்டி எழுதி வெளியான The Unexpected Guest என்கிற நாவலின் கதையை தழுவலாக கொண்டு பல படங்கள் 1980 முதலே ஹாலிவுட்டில் வந்துக்கொண்டுள்ளன. அந்த கதையையே ஒரு தழுவலாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தற்சமயம் விஜய் சேதுபதி நடித்து வெளியாகி இருக்கும் மேரி கிருஸ்மஸ்.

இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் திரில்லர் திரைப்படங்களுக்கு பெயர் போனவர். தொடர்ந்து இவர் பாலிவுட் சினிமாவில் நிறைய திரில்லர் படங்களை எடுத்து ஹிட் கொடுத்து இருக்கிறார். முதன்முதலாக இவர் தமிழ் மற்றும் ஹிந்தியில் சேர்த்து எடுத்த திரைப்படம் இந்த மேரி கிருஸ்மஸ் திரைப்படமாகும்.

படக்கதை:

 மேரி கிருஸ்மஸ் திரைப்படத்தை பொருத்தவரை மும்பைக்கு மும்பை என பெயர் மாற்றப்படுவதற்கு முன்பு பம்பாய் என்பது தான் இதன் பெயராக இருந்தது. அந்த காலகட்டத்தில் தான் திரைப்படத்தின் கதை நடக்கிறது. அப்போது பம்பாயை சுற்றி பார்ப்பதற்காக செல்லும் ஒரு நபராக விஜய் சேதுபதி இருக்கிறார்.

அப்பொழுது அதே பம்பாயில் கையில் தனது குழந்தையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் கதாநாயகியுடன் இவருக்கு நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு அன்று இரவே கொஞ்சம் விரிவடைய கதாநாயகியின் வீட்டிற்கு அவர் அழைத்ததால் திடீர் விருந்தாளியாக செல்கிறார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில் அதுவரை அமைதியாக சென்று கொண்டிருந்த படம் அதற்குப் பிறகு விஸ்வரூபம் எடுக்கிறது. அடுத்து அந்த வீட்டில் நிறைய மோசமான விஷயங்கள் நடக்க துவங்கின்றன. அதனைத் தொடர்ந்து அதை எப்படி விஜய் சேதுபதி தாக்குப் பிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது.

தமிழை விடவும் பாலிவுட்டில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் தமிழில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருப்பதால் இந்த திரைப்படத்திற்கான வரவேற்பு இங்கு குறைந்திருக்கிறது. இருந்தாலும் ஒரு பேசப்படும் திரைப்படமாக மேரி கிறிஸ்மஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To Top