எஸ்.கே இடத்தை பிடிக்க இதுதான் வழி.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு…
தற்சமயம் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வரிசையாக நடித்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இருவருமே முக்கியமாக நடிகர்களாக இருந்து வருகின்றனர்.
இருவருமே வரும் காலகட்டத்தில் வளர்ந்து வந்த நடிகர்களாக இருக்கின்றனர் சொல்லப்போனால் இதற்கு முன்பே விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனுக்கும் போட்டி நடைபெறும் என்றெல்லாம் பேச்சு இருந்தது.
ஆனால் அவர்கள் இருவருமே நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர் விடுதலை படத்தின் நிகழ்ச்சி நடந்த பொழுது கூட அதில் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி இருவருமே கலந்து கொண்டு இருந்தனர். ஆனால் இருவரும் ஒரே காலகட்டத்தில் வந்தாலுமே கூட சிவகார்த்திகேயன் தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் ஒரு பெரிய நடிகராக மாறிவிட்டார்.
விஜய் சேதுபதியின் முடிவு:
ஆனால் விஜய் சேதுபதி அந்த இடத்தை இன்னும் தொடவே இல்லை நடிப்பு ரீதியாக பார்க்கும் பொழுது சிவகார்த்திகேயனை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் விஜய் சேதுபதி என்று கூறப்படுகிறது. அப்படி இருந்துமே கூட விஜய் சேதுபதியால் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணம் அவருக்கு தெரிந்த நண்பர்களுக்கு எல்லாம் உதவி செய்கிறேன் என்று அவர்களது திரைப்படத்தில் நடித்து கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் தற்சமயம் மகாராஜா மற்றும் விடுதலை ஆகிய இரண்டு திரைப்படங்கள் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.
மகாராஜா திரைப்படம் சீனாவிலும் வெளியாகி இருக்கிறது. எனவே இனி நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் தேர்ந்தெடுத்துதான் நடிக்க வேண்டும் பழக்கவழக்கங்களுக்காக திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி. சிவகார்த்திகேயன் போலவே ஒரு பிரபலமான நடிகராக மாறுவதற்கான வேலையில் இறங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி என்று இது குறித்து கருத்து தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.