Connect with us

பிக்பாஸ் 8 இல் விஜய் சேதுபதி சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

vijay sethupathi 2

Bigg Boss Tamil

பிக்பாஸ் 8 இல் விஜய் சேதுபதி சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் விஜய் சேதுபதி இருந்து வருகிறார். நாளுக்கு நாள் விஜய் சேதுபதிக்கான சம்பளம் என்பதும் அதிகரித்து வருகிறது.

இப்பொழுது எல்லாம் விஜய் சேதுபதிக்கு கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களை விடவும் வில்லனாக நடிக்கும் படங்களுக்கு அதிக வரவேற்புகள் கிடைத்து வருகின்றன. இதனால் கதாநாயகனாக நடிக்கும் படங்களை விடவும் வில்லனாக நடிக்கும் படங்களில் அவருக்கான சம்பளம் என்பது அதிகமாக இருந்து வருகிறது.

சாதாரணமாக 17 கோடி சம்பளமாக வாங்கி வரும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படங்களில் 20 கோடி ரூபாய் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் வர வர ஹீரோவாக நடிக்கும் படங்களை விடவும் வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக வருவதால் இனி வில்லனாக நடிப்பதில்லை என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

vijay sethupathi 2

Social Media Bar

விஜய் சேதுபதி சம்பளம்:

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் அதிலிருந்து விலகிய காரணத்தினால் தற்சமயம் விஜய் சேதுபதி இதை தொகுத்து வழங்க இருக்கிறார்.

போன பிக் பாஸில் கமல்ஹாசன் 160 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கும் அவ்வளவு தொகை சம்பளமாக கொடுக்க மாட்டார்கள் ஏனெனில் விஜய் சேதுபதியின் மார்க்கெட் என்பது கமல் அளவிற்கு அதிகம் கிடையாது.

மேலும் கமல் அளவிற்கு விஜய் சேதுபதி பெரிய நடிகரும் கிடையாது என்பதால் அவருக்கு 60 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று படங்களில் நடித்தால் விஜய் சேதுபதிக்கு எவ்வளவு தொகை சம்பளமாக கிடைக்குமோ அந்த தொகையை மூன்று மாதங்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு அளித்திருக்கின்றனர் விஜய் டிவி நிறுவனத்தினர். இது பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

To Top