News
சீரியல் நடிகையால் அவமானத்துக்கு உள்ளான விஜய் சேதுபதி!.. இரவெல்லாம் அழுகை.. உண்மையை பகிர்ந்த விஜய் சேதுபதி..!
தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கான வரவேற்பு என்பது எந்த அளவிற்கு இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.
முக்கியமாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதை விடவும் வில்லனாக நடிக்கும்போது அவருக்கு தமிழில் வரவேற்புகளும் வாய்ப்புகளும் அதிகம் என்று கூறலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கும் போது அந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக எடுத்து செய்திருப்பார் விஜய் சேதுபதி.
வில்லனாக மாஸ் காட்டிய ஹீரோ:
மாஸ்டர் திரைப்படத்தில் வரும் பவானி கதாபாத்திரம் ஒரு மாதிரி இருந்தால் அடுத்து விக்ரம் படத்தில் வரும் சந்தானம் முற்றிலும் வேறு வகையான ஒரு கதாபாத்திரமாக இருக்கும்.

அதுதான் விஜய் சேதுபதியின் சிறப்பான விஷயமாக இருக்கிறது தொடர்ந்தது விஜய் சேதுபதி திரைப்படத்தை பார்ப்பதற்கு மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர் தற்சமயம் அவர் நடிப்பில் மகாராஜா என்கிற திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது சித்தா திரைப்படத்தைப் போலவே இந்து திரைப்படம் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதியை பேசும் படமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
சீரியலில் வந்த கஷ்டம்:
இந்த நிலையில் தனது ஆரம்பகட்ட வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பெண் என்கிற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடித்தேன்.
அதில் சீதா, ரேவதி, டெல்லி கணேஷ் என பலரும் நடித்திருந்தனர். அப்பொழுது அந்த சீரியலில் உள்ள உதவி இயக்குனர் எப்பொழுதும் என்னைத் திட்டிக் கொண்டே இருப்பார்.

அதனாலே நான் பயந்து கொண்டிருப்பேன் அப்பொழுது என்னிடம் சீதா மேடம். மற்றவர்கள் நடிக்கும்போது நீ அவர்கள் கண்களாலேயே எப்படி நடிக்கிறார்கள் என்று பார் என்றெல்லாம் கூறுவார். அப்பொழுது எல்லாம் நான் இரவெல்லாம் அழுது இருக்கிறேன். நமது வாழ்க்கை மொத்தமும் இப்படியே போய் விடுமோ என்று நினைத்திருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.
