Connect with us

அப்படியெல்லாம் பேக்குன்னு சொல்ல கூடாது.. சோயாவை கலாய்த்த இர்ஃபானுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி..!

zoya vijay sethupathi

News

அப்படியெல்லாம் பேக்குன்னு சொல்ல கூடாது.. சோயாவை கலாய்த்த இர்ஃபானுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி..!

Social Media Bar

குக் வித் கோமாளி சீசன் 5 துவங்கிய நாள் முதலே அதில் சில பிரபலங்கள் ஹைலைட்டாக மக்கள் மத்தியில் தெரிந்து வருகின்றனர். அதில் முக்கியமானவராக நடிகையும் இயக்குனருமான சோயா இருந்து வருகிறார்.

சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சோயா அதனை தொடர்ந்து திரை துறையில் வாய்ப்பைப் பெற்று தற்சமயம் ஒரு திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

சோயாவின் காதல்:

இந்த நிலையில் அவர் தமிழ் யூட்யூப்பரான டிடிவி வாசனை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு நடுவே தற்சமயம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கிறார் சோயா.

அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் தமிழ் அவருக்கு அவ்வளவாக வராது. இருந்தாலும் அவர் மலையாளம் கலந்து பேசும் தமிழ் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். பலரும் இதனை ரசிக்கின்றனர்.

அந்த வகையில் அவர் பேசுவது காமெடியாக இருப்பதால் அதிக பிரபலமாகி இருக்கிறார் ஷோயா. இதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் மகாராஜா திரைப்படத்தை பிரமோஷன் செய்வதற்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

அப்பொழுது அவர் ஏற்கனவே சோயா குறித்து கேள்விப்பட்டிருந்ததால் அதுக்குறித்து சோயாவிடம் வந்து கேட்டார். அப்போது பக்கத்தில் இருந்த இர்ஃபான் சோயாவை பேக்கு என கூறி கிண்டல் செய்தார்.

பிறகு சோயா இயக்கிய திரைப்படத்தின் டிரைலரை பார்த்த விஜய் சேதுபதி அவரை பாராட்டியதோடு இல்லாமல் அவர் இயக்குனர் என்பது உங்களிடம் காட்டிக் கொள்ளாமல் எவ்வளவு சிம்பிளாக இருக்கிறார் பாருங்கள். அதனால்தான் உங்களால் இவ்வளவு எளிதாக அவரை கலாய்க்க முடிகிறது என்று கூறி இர்ஃபானுக்கு நோஸ்கட் கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி அது தற்சமயம் வைரல் ஆகி வருகிறது.

To Top