முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் த்ரில்லர்.. விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படம்… வெளியான ப்ரோமோ..!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். சமீப காலங்களாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
கடைசியாக அவரது நடிப்பில் விடுதலை 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரங்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஒரு ட்ரெயினுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் மொத்த கதையாக இருக்கிறது.
இந்த படம் குறித்த அப்டேட்டை முன்பே அறிவித்திருந்தார் மிஸ்கின். இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ ஒன்றை விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு மிஸ்கின் வெளியிட்டுள்ளார்.
அதில் பார்க்கும்போது படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி படமாக இருக்கும். மேலும் விஜய் சேதுபதிக்கும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் டப்பிங்கில் கூட விஜய் சேதுபதி எவ்வளவு கஷ்டப்பட்டு பணிப்புரிந்துள்ளார் என்பதும் தெரிகிறது. இந்த நிலையில் இந்த வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது.