அந்த ஒரு முடிவு போதும்.. விஜய் பையன் யாருன்னு சொல்றதுக்கு..! அசந்துப்போன திரையுலகம்.!

வாரிசு நடிகர்கள் சினிமாவிற்கு வருவது என்பது தொடர்ந்து நடந்து வரும் விஷயமாகதான் இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகராக வந்தவர்தான். ஆனாலும் வாரிசு நடிகர் என்பதால் மட்டும் விஜய்க்கு வாய்ப்புகள் கிடைத்துவிடவில்லை.

இந்த நிலையில் விஜய் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் என்றுதான் கூற வேண்டும். ஆரம்பத்தில் விஜய்யை யாருமே ஒரு கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தன.

அதன் மூலமாக விஜய் தனக்கான இடத்தைப் பெற்றார். விஜய் தமிழில் எவ்வளவுவிற்கு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறாரோ அதேபோல தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார். அதனால் தோல்வி என்பது விஜய்க்கு புதிது கிடையாது என்றாலும் தோல்வியை கண்டு விஜய் என்றுமே ஒதுங்கியது கிடையாது.

ஜேசன் சஞ்சய்:

தொடர்ந்து போராடி சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார் இப்பொழுது சினிமாவை விட்டு மொத்தமாக விலகி விட்டு அரசியலில் ஈடுபட இருக்கிறார் விஜய். இதனால் 2025 ஆம் ஆண்டுக்கு பிறகு விஜய் நடிக்க மாட்டார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. தற்சமயம் நடிக்கும் 69ஆவது திரைப்படம் தான் அவரது கடைசி திரைப்படம் என்று கூறப்படுகிறது.

jason sanjay
jason sanjay
Social Media Bar

இந்த நிலையில் அதே 2025 ஆம் வருடம்தான் விஜயின் மகன் ஆன ஜேசன் சஞ்சய் சினிமாவிற்குள் இயக்குனராக களம் இறங்குகிறார். அவரது திரைப்படம் அடுத்த வருடம் துவங்க இருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் கூறும் பொழுது விஜயின் மகன் எனும் பொழுது ஜேசன் சஞ்சய்க்கு எக்கச்சக்கமான செல்வாக்கு இருக்கிறது.

இப்பொழுதும் அவர் கதாநாயகனாக நடிக்க வந்தார் என்றால் அவருக்கு வரவேற்பு இருக்கும். ஆனாலும் திரைப்படம் இயக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருக்கிறது. விஜய் மகன் என்பதால் அவர் நினைத்திருந்தால் எவ்வளவோ முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கியிருக்கலாம்.

ஆனால் சின்ன நடிகரை வைத்து படம் பண்ண வேண்டும் என்கிற முடிவுக்கு ஜேசன் சஞ்சய் வந்ததன் மூலமாகவே அவர் ஒரு சிறந்த இயக்குனராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கதாநாயகன் போன்றவற்றையெல்லாம் விட்டுவிட்டு தன்னுடைய கதையின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார் சஞ்சய்.

அதுவே சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது என்று இது குறித்து பேசி இருக்கிறார் அந்தணன்.