News
பாலான்னாலே கெத்துதான் பா!.. வீடியோவில் மனம் வருந்திய பையனுக்கு பைக்கை இறக்கிய பாலா!.
KPY Bala: தமிழ் சினிமா பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறார் கலக்கப்போவது யாரு பாலா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வாய்ப்பு தேடி வந்தவர் என்பதால் அவர் சம்பாதிக்கும் தொகை அனைத்தையும் மக்களுக்கு நன்மைகள் செய்வதற்காக உபயோகித்து வருகிறார்.
இதனால் பாலாவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் வெள்ளம் வந்தப்போது பலருக்கும் பல நிவாரண உதவிகளை செய்தார் பாலா. அதே போல ஒரு கிராமத்தில் சுத்தமில்லாத தண்ணீர் வருவதால் அதை குடித்து மக்களுக்கு நோய் வருகிறது என்பதை அறிந்த பாலா அவர்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை வைத்து கொடுத்தார்.

அதே போல நிறைய இடங்களில் ஆம்புலன்ஸ் வண்டியும் இலவசமாக வாங்கி தந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் போடும் பையனின் வீடியோ ஒன்று வைரலாகியிருந்தது. ஒரு பைக் ஓட்டும் நபர் அந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
அவர் பெட்ரோல் போடும்போது அவரது கேமிராவை பார்த்து அதன் விலை என்ன என பெட்ரோல் போடும் பையன் கேட்பார். அதற்கு அவர் 35,000 என கூற எங்க வீட்ல எல்லாம் பைக் கேட்டாலே திட்டுராங்க. சைக்கிள் கூட என்கிட்ட இல்ல என மனம் வருந்தி இருந்தார்.
இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த பாலா உடனே ஒரு டி.வி.எஸ் பைக்கை புதிதாக வாங்கி அதை அந்த நபருக்கு பரிசளித்து உள்ளார். இப்படியான மனசு எல்லாம் நம் ஆட்சியாளர்களுக்கு கூட கிடையாதே என பலரும் பாலாவை புகழ்ந்து வருகின்றனர்.
