பொங்கலுக்கு வாரிசு கன்ஃபார்ம்! ப்ரோமோ விட்ட படக்குழு –  துணிவு நிலை என்ன?

வெகு காலங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இருவரும் நேரடியாக போட்டி போட்டுக்கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் அஜித் நடித்து துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு இரண்டு திரைப்படங்களுமே வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது என கூறப்பட்டது.

ஆனால் அதிகாரபூர்வமாக படக்குழு எதையும் இன்னும் அறிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது விஜய்யின் வாரிசு வருகிற பொங்கலுக்கு கண்டிப்பாக வெளியாகும். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்தான் இந்த படத்தை வெளியிடுகிறது. இதற்காக ஒரு ப்ரோமோ வீடியோவை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.

அந்த ப்ரோமோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

ஆனால் துணிவு படம் குறித்து சில சர்ச்சைகள் போய்க்கொண்டுள்ளது. படத்தின் டப்பிங் மற்றும் வி.எஃப்.எக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையாததால் தேதி தள்ளி போகலாம் என பேசப்படுகிறது. ஆனால் உதயநிதி இதற்காக ஏற்கனவே திரையரங்குகளை பிடிக்க துவங்கி விட்டதால் இந்த படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh