Connect with us

மணிரத்தினம் படம்லாம் எனக்கு வேண்டாம்… சரத்குமாருக்கு கை மாற்றி விட்ட விஜயகாந்த்!.. இதுதான் காரணம்!.

sarathkumar vijayakumar

Cinema History

மணிரத்தினம் படம்லாம் எனக்கு வேண்டாம்… சரத்குமாருக்கு கை மாற்றி விட்ட விஜயகாந்த்!.. இதுதான் காரணம்!.

Social Media Bar

Maniratnam: தமிழில் வித்தியாசமான திரை கதையில் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்தினம். அவரது திரைப்படங்களான நாயகன், தளபதி போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு திரைப்படமாக இருக்கிறது.

சில திரைப்படங்கள் வெளியாகும் காலகட்டத்தில் பெரிதாக ஓடாவிட்டாலும் கூட அதற்குப் பிறகு மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலம் ஆனது. அப்படி பிரபலம் அடைந்த ஒரு திரைப்படம்தான் நாயகன் நாயகன் திரைப்படத்தின் பிரபலத்திற்கு பிறகு மணிரத்தினத்திற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

ஆனால் ஒரு நேரத்தில் மணிரத்தினத்தால் ஒரு திரைப்படத்தைதான் இயக்க முடியும் என்பதால் அவர் குறைவான அளவில் திரைப்படங்கள் இயக்கினார். ஆனால் திரைப்படக் கதையை பொறுத்தவரை எக்கச்சக்கமான கதைகள் இருந்தன.

Vijayakanth
Vijayakanth

அவை அனைத்தையும் படமாக்க முடியாத நிலையில் அவர் இருந்தார் எனவே அவர் எழுதிய கதைகளை மற்ற நடிகர்களுக்கு அவர் கொடுத்து விடுவார். இப்படியாக விஜயகாந்திற்கு ஒரு கதையை எழுதிக் கொடுத்தார் மணிரத்தினம்.

அந்தக் கதை விஜயகாந்திற்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்தது அதுதான் 1990 இல் வெளியான சத்ரியன் என்கிற திரைப்படம். அதற்குப் பிறகு விஜயகாந்த்திற்க்கு இன்னொரு கதையை மணிரத்தினமே எழுதி கொடுத்தால் நன்றாக இருக்கும் அதுவும் நன்றாக வெற்றி பெறும் என்று நினைத்தனர் தயாரிப்பாளர்கள்.

எனவே இன்னொரு கதையை மணிரத்தினத்திடம் கேட்ட பொழுது மணிரத்தினமும் ஒரு சிறப்பான கதையை எழுதி கொடுத்தார் அந்தக் கதை விஜயகாந்த்திற்கும் பிடித்திருந்தது ஆனாலும் அதில் நடிக்க மறுத்துவிட்டார் விஜயகாந்த். இந்த கதை கண்டிப்பாக பெரும் வெற்றியை கொடுக்கும்.

இந்த நேரத்தில் என்னுடைய நண்பன் சரத்குமார் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் அவருக்கு இந்த படத்தை கொடுக்கலாம் என கூறி வேகமாக சரத்குமாருக்கு போன் செய்து அவரை இந்த திரைப்படத்தில் நடிக்குமாறு கூறினார். அதன்படி சரத்குமார் நடித்து வெளியான திரைப்படம் தசரதன் இந்த திரைப்படத்திற்கும் கதையை மணிரத்தினம் தான் எழுதியிருந்தார் அந்த அளவிற்கு நண்பர்களுக்கு உதவக்கூடிய ஒரு மனிதராகவே விஜயகாந்த் இருந்திருக்கிறார்.

To Top