பண பிரச்சனையால் வெளியாகாமல் இருந்த சத்யராஜ் திரைப்படம். உதவி செய்த விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்தும் சத்யராஜூம் சினிமா துறையில் சம காலத்தில் சினிமாவிற்கு வந்தவர்கள். இருவருமே ஒன்றாகதான் சினிமாவில் வாய்ப்பு தேடினார்கள். அதே போல இருவரும் ஒன்றாகவே சினிமாவில் வாய்ப்பு பெற்றனர்.

Social Media Bar

வளர்ந்து வரும் காலக்கட்டங்களில் கூட விஜயகாந்திற்கு போட்டி நடிகராக இருந்தவர் சத்யராஜ். இருந்தாலும் இருவரும் நண்பர்களாகவே இருந்து வந்தனர். இந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த வள்ளல் என்கிற திரைப்படம் வெளியானது.

ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பு நிறைய பிரச்சனைகள் அதில் இருந்தன. கடன் தொல்லை பிரச்சனையால் அந்த படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அந்த படத்தை விஜயகாந்தின் மனைவி பார்த்தார். பார்த்துவிட்டு விஜயகாந்திடம் அந்த படம் நன்றாக உள்ளது என கூறியுள்ளார்.

இதையடுத்து மறுநாள் காலை சத்யராஜ்க்கு போன் செய்துள்ளார் விஜயகாந்த். நீங்க நடிச்சல் வள்ளல் எனும் படம் என்ன காரணத்தால் வெளியாகாமல் இருக்கு என கேட்டுள்ளார். அதற்கு சத்யராஜ் அதை அப்புறம் பார்த்துக்கலாம் விஜயகாந்த் என கூறியுள்ளார்.

ஆனால் உடனே சத்யராஜ் வீட்டிற்கு கிளம்பி வந்த விஜயகாந்த் அந்த படத்தின் கடன் பிரச்சனையை சரி செய்து படத்தை வெளியிட உதவினார். இப்போது கூட போட்டி நடிகர்களுக்கு கதாநாயகர்கள் அந்த அளவிற்கு உதவாத போது விஜயகாந்த் அப்போதே உதவி இருக்கிறார் என சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.