Connect with us

என் மனைவிக்கு உடம்பு சரியில்லாதப்ப நேர்ல வந்து நின்றவர் கேப்டன்!.. மனம் கலங்கும் விஜய் பட தயாரிப்பாளர்!..

vijayakanth kalaipuli s thanu

Cinema History

என் மனைவிக்கு உடம்பு சரியில்லாதப்ப நேர்ல வந்து நின்றவர் கேப்டன்!.. மனம் கலங்கும் விஜய் பட தயாரிப்பாளர்!..

Social Media Bar

தமிழ் திரையுலக கதாநாயகர்களில் பல காலங்கள் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். அதே போல தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்தில் அதிக படம் நடித்தவர் விஜயகாந்த் மட்டும்தான்.

தமிழ் திரைப்பட ஊழியர்களுக்கு பல நன்மைகளை விஜயகாந்த் செய்துள்ளார். முக்கியமாக அவரது திரைப்படத்தில் பணிப்புரிபவர்களுக்கு தினமும் அசைவ சாப்பாடுதான் போடுவாராம் கேப்டன். இதற்காக அவரது சம்பளத்தில் இருந்து மூன்று லட்ச ரூபாயை கொடுத்துவிடுவாராம்.

இப்படி திரையுலகில் பலருக்கும் இவர் நன்மைகளை செய்துள்ளார். தமிழின் பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். அதே போல இவர் விஜயக்காந்தை வைத்தும் திரைப்படம் தயாரித்துள்ளார்.

ஒருமுறை கலைப்புலி எஸ் தாணுவின் மனைவிக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் வீட்டிற்கு வந்த பிறகு அதுக்குறித்து பிரபலங்கள் பலரும் தாணுவிற்கு போன் செய்து விசாரித்துள்ளனர். ஆனால் விஜயகாந்த் மட்டும் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு நேரிலேயே வந்துவிட்டாராம்.

வந்தவர் முழுமையாக விசாரித்துவிட்டு ஆறுதல் கூறிவிட்டு சென்றாராம். இந்த நிகழ்வை கலைப்புலி எஸ்.தாணு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top