மாப்ள அந்த சீட்டை போடாத மாப்ளே!.. விஜயகாந்த் படத்தால் குடும்பத்தை பிரிந்த தயாரிப்பாளர்!.

vijayakanth old movies: கமல் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் எப்போதுமே வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிக்கும் படங்களுக்கு நகர மக்களை காட்டிலும் கிராம மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. இதனாலேயே அவர் எத்தனை படங்கள் நடித்தாலும் அந்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி பெறும் என்கிற நிலை இருந்தது.

விஜயகாந்தின் மார்க்கெட்டும் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் நிறைய புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த். முக்கியமாக விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகருக்கு விஜயகாந்த் அதிக வாய்ப்புகளை கொடுத்துள்ளார்.

அவரின் திரைப்பட வெற்றிகள் குறித்து பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்திரன் ஒரு பேட்டியில் பேசும் பொழுது அவர்களது அண்ணன்களை விட்டு அவர் பிரிந்து வந்து தனியாக விநியோகஸ்தர் ஆவதற்கு முக்கிய காரணமே விஜயகாந்த் படம்தான் என்று கூறியுள்ளார்.

Social Media Bar

அவரது குடும்பத்தார் விஜயகாந்த் நடித்த அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படத்தை 18 லட்சத்திற்கு வாங்கி இருந்தனர். அதை வேறு ஒரு விநியோகஸ்திர்க்கு 20 லட்சத்திற்கு விற்றனர். அதை 20 லட்சத்திற்கு விற்க வேண்டாம் ஏற்கனவே அந்த படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன. எனவே படமும் நல்ல வரவேற்பை என கூறியுள்ளார் ரவீந்திரன்.

ஆனால் அவரது வீட்டார் அதை கேட்கவில்லை. விற்கப்பட்ட அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு ஓடி லாபம் கொடுத்தது. இதனால் மிகுந்த கோபத்திற்கு உள்ளானார் ரவீந்திரன். இப்படி படங்களை குறைந்த லாபத்திற்கு விற்பதற்கு நாமே அவற்றை வெளியிட்டால் அதிக காசு கிடைக்குமே என்று தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி வந்துவிட்டேன் என்று பேட்டில் கூறியிருக்கிறார்.

இப்போதெல்லாம் படத்திற்கு எடுக்கப்பட்ட காசை விட இரண்டு மடங்கு அதிக லாபம் வந்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அப்பொழுது 10 மடங்கு அதிக லாபங்கள் கொடுத்திருக்கின்றனர் நடிகர்கள்.