வேண்டாம்னு சொல்லியும் ரஜினி கேக்கல.. ஒரு சர்ச்சை காட்சியால் சிக்கலில் சிக்கிய விஜயசாந்தி..!
நயன்தாராவிற்கு முன்பே தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. பெரும்பாலும் நடிகை விஜயசாந்தி திரைப்படங்களில் சண்டை காட்சிகள் இருக்கும்.
அப்போதெல்லாம் நடிகைகள் சண்டை காட்சிகள் போடுவதாக படங்களில் காட்சிகளே வைக்கப்படாமல் இருந்தது. ஆனால் அதனை மாற்றி விஜயசாந்தி தொடர்ந்து சண்டை காட்சிகளில் நடித்து வந்து கொண்டிருந்தார்.
விஜயசாந்தி:
இந்த நிலையில் விஜயசாந்தியும் நடிகர் ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்த திரைப்படம் மன்னன். மன்னன் திரைப்படம் அப்போதைய காலகட்டத்திலேயே அதிக வரவேற்பை பெற்று வெற்றியை கொடுத்தது.
இந்த திரைப்படம் 1992 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியானது இயக்குனர் பி.வாசு அந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தால் சில எதிர்மறையான விமர்சனங்களை விஜயசாந்தி சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் மன்னன் திரைப்படத்தின் கதையை நான் கேட்ட பொழுது அது எனக்கு பிடித்திருந்தது ஆனால் அதில் ஒரு காட்சி மட்டும் எனக்கு இடையூறாக இருந்தது.
மன்னன் படத்தில் நடந்த சம்பவம்:
ரஜினிகாந்தை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி ஒன்று எனக்கு வைக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்தை அடிப்பது போன்ற காட்சியில் என்னால் நடிக்க முடியாது என்று நான் இயக்குனர் பி வாசுவுடன் கூறிவிட்டேன்.
அந்த காட்சியை நீக்க முடியும் என்றால் மட்டும் சொல்லுங்கள் இல்லையென்றால் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். பிறகு எனக்கு போன் செய்த ரஜினிகாந்த் அந்த காட்சி படத்திற்கு தேவையான காட்சி தான் அதில் நடிப்பதால் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சமாதானப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.
ஆனால் படம் வெளியான பிறகு அந்த காட்சியால் பிரச்சனை ஆனது என ஒரு பேச்சு உண்டு.