Connect with us

நான் விஜய்யை வச்சு படம் பண்ண பார்த்தா அவர் பையன் என்ன வச்சி படம் பண்றாராம்… ஷாக் ஆன விஷால்!.

vishal jason sanjay

News

நான் விஜய்யை வச்சு படம் பண்ண பார்த்தா அவர் பையன் என்ன வச்சி படம் பண்றாராம்… ஷாக் ஆன விஷால்!.

நான் விஜய்யை வச்சு படம் பண்ண பார்த்தா அவர் பையன் என்ன வச்சி படம் பண்றாராம்… ஷாக் ஆன விஷால்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் பெரும் உயரத்தை தொட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்சமயம் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களம் இறங்கப் போவதாக லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது.

ஜேசன் சஞ்சய் யாரை வைத்து திரைப்படம் இயக்கப் போகிறார் என்ன வகையான திரைப்படம் என்பது குறித்த எந்த ஒரு தகவலும் இன்னும் வெளிவரவில்லை. இயக்குனர் ஆக வேண்டும் என்பதற்காகவே வெளிநாடு சென்று படித்து வந்தவர் ஜேசன் சஞ்சய்.

ஆனால் விஜய்யின் மகன் என்பதால்தான் அவருக்கு மிக எளிதாக லைக்கா நிறுவனத்திலேயே வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த நிலையில் விஷாலை கதாநாயகனாக வைத்துதான் ஜேசன் சஞ்சய் திரைப்படம் எடுக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து விஷாலிடம் கேட்டபோது இல்லை அந்த விஷயம் எதுவும் உண்மை இல்லை. உண்மையில் நான்தான் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கலாம் என்று வெகு நாட்களாக ஆசைப்பட்டு வருகிறேன். நீங்கள் என்னவென்றால் அவர் பையன் என்னை வைத்து படம் இயக்க பார்க்கிறார் என்று கூறுகிறீர்களே என்று ஆச்சரியமாக கேட்டுள்ளார் விஷால்.

To Top