ஆயிரம் கோடி வசூல் உறுதி? விக்ரம் படம் குறித்து ஹாலிவுட் நிர்வாகி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் “விக்ரம்”. இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் விழா சமீபத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் சூர்யாவும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதை ஆடியோ வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜே உறுதி செய்தார்.
படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலாக படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது. ஏராளமான முக்கிய நடிகர்கள் நடித்துள்ளதாலும், கமல்ஹாசனின் படம் நீண்ட நாட்கள் கழித்து வெளியாவதாலும் பட ரிலீஸுக்கு இப்போதே ரசிகர்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.
சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பெரிய பெரிய பிரபலங்களும் கூட இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர். விக்ரம் பட ட்ரெய்லர் குறித்து பேசியுள்ள லயன்ஸ்கேட் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய நிர்வாகி “என்ன ஒரு சூப்பரான ட்ரெய்லர்! அடுத்த ஆயிரம் கோடி வசூலுக்கு தயார் போல?” என்று கூறியுள்ளார்.