லியோ படத்துக்கு வேற பேர் வைக்கலாம்னு இருந்தோம்!. டைட்டிலை தட்டி தூக்கிய விஷால்!.
தற்சமயம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டக்கூடிய திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. மக்கள் பலரும் லியோ திரைப்படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். ஏற்கனவே இருந்த வரவேற்பை திரைப்படத்தின் ட்ரைலர் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது முதலில் படத்திற்கு லியோ என பெயர் வைக்க வேண்டும் என்று எங்களுக்கு எந்த வித யோசனையும் இல்லை. முதலில் நாங்கள் படத்திற்காக யோசித்த பெயர் ஆண்டனி.
ஆனால் ஏற்கனவே ஆண்டனி என்கிற பெயரை வேறு ஒரு நிறுவனம் ரிஜிஸ்டர் செய்திருந்தது. அதே போல அப்போதுதான் மார்க் ஆண்டனி திரைப்படமும் வெளியாக இருந்தது. எனவே ஆண்டனி என்கிற பெயர் வேண்டாம் என முடிவு செய்தோம்.
சரி ஆண்டனிக்கு பதிலாக வேறு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தப்போது சிங்கத்தின் அடிப்படையில் ஒரு பெயர் வைக்கலாம் என யோசித்தப்போது எனது உதவி இயக்குனர் லியோ என்கிற பெயரை கூறினான். சரி சிங்கத்துக்கு தொடர்பான பெயராக இருக்கிறதே என அந்த பெயரையே படத்திற்காக தேர்ந்தெடுத்தேன்.