Bigboss vikram saravanan and Vishnu : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் அத்துமேறி பேசி வரும் இரு முக்கியமான நபர்கள் என்றால் அது நிக்சனும் விஷ்ணுவும் தான்.
இவர்கள் இருவருமே கொஞ்சம் கோபமாகிவிட்டாலும் கூட அவர்கள் வெளிவிடும் வார்த்தைகள் குறித்து எந்த ஒரு யோசனையும் இல்லாமல் பேசி விடுகிறார்கள். ஆனால் பிக் பாஸை பொருத்தவரை அது 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் வீடு என்பதால் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமாக கண்காணிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில் விஷ்ணு தற்சமயம் சரவணன் விக்ரமிடம் பேசும்பொழுது தமாஷாக பேசுகிறேன் என்று அவரை கேலி செய்து சில தவறான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருக்கிறார். இத்தனைக்கும் போன வாரம் முழுவதும் விஷ்ணுவிற்கு துணையாக நின்றுதான் விக்ரம் விளையாடினார் நிறைய இடங்களில் அவர் விஷ்ணுவிற்கு சப்போர்ட்டாக இருந்திருக்கிறார்.
இருந்தும் கூட விஷ்ணு இப்படி செய்வது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டாக பேசிய விஷ்ணு கூறும் பொழுது சரவணன் விக்ரமை மக்கு, கரப்பான் பூச்சி, 5 ஸ்டார் நாய் என்றெல்லாம் கேலியாக பேசுகிறார். ஆனால் அதுவே அப்படி விஷ்ணுவை பேசினால் அவர் அமைதியாக இருப்பாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.






