Connect with us

அந்த நேரத்தில் கூட போய் சாமி கும்பிடுவேன்.. இப்படியும் ஒரு பழக்கமா.. உண்மையை கூறிய சீரியல் நடிகை!.

vj-deepika

News

அந்த நேரத்தில் கூட போய் சாமி கும்பிடுவேன்.. இப்படியும் ஒரு பழக்கமா.. உண்மையை கூறிய சீரியல் நடிகை!.

Social Media Bar

சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தீபிகா. சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற முடியும் என்பதை தெரிந்து கொண்ட தீபிகா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

இளம் வயதிலேயே இவர் சின்னத்திரையில் நடிப்பதற்கு வந்து விட்டார் முதலில் விஜேவாக நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பேசி வந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு சீரியல்களிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

விஜய் டிவி பிரபலம்:

வி.ஜேவாக நடிக்க இருக்கும்போது இவரது திறமையை அதிகமாக பேசப்பட்ட விஷயமாக இருந்தது. இந்த நிலையில் இவருக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதை அறிந்த சின்ன தொலைக்காட்சிகள் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் சீசனில் ஐஸ்வர்யா என்கிற கதாபாத்திரத்தில் விஜய் டிவியில் இவர் நடித்திருப்பார் அதற்கு பிறகு அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கோவிலுக்கு பெண்கள் செல்வது குறித்து சில சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது பீரியட்ஸ் சமயத்தில் கூட நான் கோவிலுக்கு செல்வேன்.

அப்பயும் சாமி கும்பிடுவேன்:

சாமி கும்பிடுவேன் பூஜை அறைகளுக்கும் நான் செல்வேன் விபூதி குங்குமம் போன்றவற்றை நான் வைத்துக் கொள்வேன். என்னை பொறுத்தவரையில் கடவுள் என் மேல் கோபப்பட மாட்டார். எனக்கு உடம்பு சரியில்லை என்பதை அவர் புரிந்து கொள்வார்.

என்னை கடவுள் எப்போதும் ஒதுக்க மாட்டார் அப்படி இருக்கும் பொழுது என்னை ஒதுக்குவதற்கு நீங்கள் யார் என்னிடம் அப்படி சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்று வெளிப்படையாக கூறியுள்ளார். விஜே தீபிகா.

மேலும் அனைத்து நாட்களிலும் நான்வெஜ் சாப்பிடுவேன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்வேன் என்று அவர் வெளிப்படையாக கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

To Top