News
இந்த விஷயத்துக்கு கேரட்டைதான் பயன்படுத்துறேன்!.. நடிகை வெளியிட்ட விசித்திர வீடியோ..!
சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நடிகையாக அறியப்படுபவர் நடிகை வி.ஜே சங்கீதா. ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக இருந்ததால் இவருக்கு வி.ஜே சங்கீதா என்றே பெயர் அமைந்துவிட்டது.
கல்லூரி முடித்த உடனேயே வி.ஜே ஆக வேண்டும் என்பதுதான் சங்கீதாவின் ஆசையாக இருந்தஹ்டு. அதனை தொடர்ந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகளையும் பெற்றார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரஸ்வதி என்னும் தொடரில் கூட இவருக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருந்தது.
சின்னத்திரை அறிமுகம்:
பொதுவாகவே சின்னத்திரைக்கு வரும் நடிகைகள் சின்னத்திரையிலேயே தேங்கிவிடுவது கிடையாது. அதனை பயன்படுத்தி அதிகப்பட்சம் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருக்கும்.

ஏனெனில் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு எக்கச்சக்கமான சம்பளம் கிடைக்கிறது. மேலும் அதில் துணை கதாபாத்திரமாக நடிப்பவர்கள் கூட நல்ல வருமானம் பெறுகின்றனர். ஆனால் சீரியலை பொறுத்தவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் கூட அந்த வகையிலான சம்பளத்தை பெறுவதில்லை.
இதனால் வி.ஜே சங்கீதாவும் திரைத்துறைக்கு செல்வதற்கான ஒரு முன்னெடுப்பாகதான் சின்னத்திரையில் நடிக்க துவங்கினார். ஆரம்பத்தில் ஐடி நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்த வி.ஜே சங்கீதா அதன் பிறகுதான் சின்னத்திரையில் ஆவல் காட்டியுள்ளார்.
பிரபலங்களுடன் பேட்டி:
வி.ஜேவாக வாய்ப்பு கிடைத்தப்பிறகு ஜெயம் ரவி,தலைவாசல் விஜய்,நடிகை நிவேதா பெத்துராஜ் போன்ற பல பிரபலங்களை இவர் பேட்டி எடுத்துள்ளார். இதன் மூலமாக நிறைய சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் வி.ஜே சங்கீதா.

பிறகு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் புது எபிசோடுகளில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அந்த சீரியல் மூலமாக ஓரளவு இவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்தன.
இது இல்லாமல் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அன்பே வா சீரியலிலும் இவர் நடித்து வருகிறார். அன்பே வா சீரியலில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிக வைரலாகி வருகிறது.
வி.ஜே சங்கீதா நிறைய நாய்களை வளர்த்து வருகிறார். அந்த நாய்கள் அசைவ உணவுகளை விரும்பி உண்பதற்கு பதிலாக காய்கறிகளை உண்கின்றன. முக்கியமாக கேரட்டை விரும்பி சாப்பிடுகின்றன. அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார் வி.ஜே சங்கீதா.
