நேற்று பிக்பாஸ் வீட்டாரிடம் விஜய் சேதுபதி பேசும்போது வாட்டர்மெலன் ஸ்டாரை பார்வதியே கீழாக நினைப்பதாக விக்ரம் சொன்னதன் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இரண்டாம் வார இறுதியில் தீபாவளிக்காக ஒரு துணிக்கடைக்கான ப்ரொமோஷனாக ரேம்ப் வாக் நடைபெற்றது. இந்த ரேம்ப் வாக்கை ப்ரவீனும், அப்சராவும் நிர்வகித்தனர்.
அப்போது யார் யாருக்கு ஜோடியாக இருக்கலாம் என்று ஒரு ஜோடி பட்டியலை அவர்கள் ரெடி செய்த நிலையில், அதில் விஜே பாருவுக்கு ஜோடியாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை போட்டிருந்தார்கள்.
ஆனால் இது மோசமான தேர்வு என சொன்ன விஜே பார்வதி, வேண்டுமென்றே தன்னை டார்கெட் செய்து வாட்டர்மெலனை தனது தலையில் கட்டுவது போல பேசினார். அப்போது அந்த இடத்தில் வாட்டர்மெலன் ஸ்டாரும் இருந்த நிலையில் அவர் முகம் வாடிவிட்டது.
இத்தனை நாள் நட்பாக இருந்த பார்வதியே தன்னை இப்படி நினைக்கிறாரே என அவர் முகம் வாடியதை பார்த்த விக்கல்ஸ் விக்ரம் வருத்தமடைந்தார். பின்னர் மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் அதுபற்றி பேசிய விக்ரம், வாட்டர்மெலன் அண்ணனுடன் நான் சேர்ந்து ரேம்ப் வாக் போவேன் என்றார். சபரியும் அதற்கு ஓகே சொன்னார்.
அதன் விளைவுதான் ரேம்ப் வாக்கில் சுபிக்ஷாவோடு வாட்டர்மெலன் ரேம்ப் வாக் முடித்த பிறகு, சபரியும், விக்கல்ஸும் வாட்டர்மெலன் ஸ்டாரோடு ஒரு ரேம்ப் வாக் வந்ததுடன் அவரை முத்தமிடவும் செய்தனர். அதை தொடர்ந்து அத்தனை ஆண் ஹவுஸ்மேட்ஸும் அவரை வந்து அணைத்துக் கொண்டனர். இந்து விஜே பாருவின் எண்ணத்திற்கு ஒரு அடி கொடுக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
அதைதான் விக்ரம் விஜய் சேதுபதியிடமும் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி பார்வதியின் எண்ணம் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. பலரும் பார்வதியை சோசியல் மீடியாவில் துவைத்து வருகின்றனர்