Tamil Cinema News
விடிய விடிய எல்லை மீறிய நயன்தாராவும், த்ரிஷாவும், தாக்குபிடிக்க முடியாமல் ஓடிய டான்ஸ் மாஸ்டர்.!
எப்படி நடிகர்களில் விஜய் அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கிறார்களோ அதே போல நடிகைகளில் டாப் நடிகைகளாக இருந்து வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை த்ரிஷா. இருவருமே தற்சமயம் போட்டி நடிகைகளாக இருந்து வருகின்றனர்.
த்ரிஷா நயன்தாரா இருவருமே ஒரே காலக்கட்டத்தில்தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்கள். அதே போல இருவருமே தமிழில் உள்ள மிக முக்கியமான பெரிய நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளனர். சொல்ல போனால் நயன்தாராவை விட த்ரிஷா அதிக பெரும் நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
ஆனாலும் கூட நயன்தாராவுக்கு கிடைத்த மார்க்கெட் என்பது த்ரிஷாவுக்கு கிடைக்காமலே இருந்தது. அந்த விஷயத்தை மணிரத்தினம் இயக்கத்தில் வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் முறியடித்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தப்பிறகு மீண்டும் த்ரிஷாவுக்கு மார்க்கெட் கிடைத்தது.
இப்போது நயன்தாராவை விட த்ரிஷாவுக்குதான் மார்க்கெட் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் த்ரிஷாவும், நயன் தாராவும் தோழிகளாக இருந்தப்போது நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஒருமுறை த்ரிஷா, நயன்தாரா மற்றும் பிருந்தா மாஸ்டர் மூவரும் ஒரு காரில் சென்று பேசியுள்ளனர். நயன் தாராவும் த்ரிஷாவும் இரவு 3 மணிவரை பேச்சை நிறுத்தவே இல்லையாம். ஒரு கட்டத்தில் பிருந்தா மாஸ்டர் அவரை வீட்டில் கொண்டு போய் விடும்படி கேட்டுள்ளார்.
எங்களுக்கு கடினமான டான்ஸ்களை வைக்க மாட்டேன் என வாக்குறுதி கொடுங்கள் அப்போதான் வீட்டில் விடுவேன் என இருவரும் பிருந்தா மாஸ்டரை தொல்லை செய்துள்ளனர். இந்த விஷயம் சினி வட்டாரத்தில் கசிந்து பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
