ரஜினியை கீழுறிக்கிய விஜய்- இப்ப இவர்தான் நம்பர் ஒன்

தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் இடம் என்பது அவரது சம்பள தொகையை வைத்தே கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சில காலங்களாக ரஜினியே அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகராக இருப்பதால் அவரே முதல் இடத்தை பிடித்து வருகிறார்.

ரஜினிக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். இந்நிலையில் பிகில் திரைப்படம் வரை 80 கோடி சம்பளமாக வாங்கி கொண்டிருந்த விஜய், தனது சம்பளத்தை 100 கோடியாக உயர்த்தியுள்ளார் என கூறப்படுகிறது.

ரஜினியின் சம்பளம் 115 கோடியாக இருந்தது. ஆனால் தற்சமயம் ஜெயிலர் படத்தில் சில காரணங்களுக்காக சம்பளத்தை குறைத்து 80 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார் நடிகர் ரஜினி.

இதனால் இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளார் ரஜினி. ஆனால் இதை சரி செய்யும் விதமாக சில விஷயங்களை ரஜினி செய்துள்ளாராம். அதாவது அடுத்து லைக்காவுடன் இணைய இருக்கும் இரண்டு படங்களுக்கும் படத்திற்கு 150 கோடி என 300 கோடி சம்பளம் பேசி உள்ளாராம் ரஜினி.

லைக்காவும் அதற்கு ஒப்புக்கொண்டதால் திரும்பவும் முதல் இடத்தை பிடித்துக்கொண்டார் ரஜினி.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh