அவங்க அனுமதிக்கமாட்டாங்க.. ரஜினியை எல்.சி.யுவில் சேர்க்காததுக்கு இதுதான் காரணம்.. உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்.
ஹாலிவுட்டில் மார்வெல் சினிமா யுனிவர்ஸ் என்று இருப்பது போல தமிழ்நாட்டில் முதன்முதலாக சினிமாட்டிக் யுனிவர்சிட்டி உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ்.
சினிமாட்டிக் என்றால் வேறொன்றுமில்லை அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் மற்ற திரைப்படத்துடன் தொடர்பு இருக்கும். இப்பொழுது கைதி, விக்ரம் மாதிரியான திரைப்படங்களை ஒன்றிணைத்து அவர் திரைப்படம் ஆக்குவது போல இருப்பதுதான் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் எல்லா திரைப்படங்களும் அவருடைய சினிமாட்டிகில் வரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. முக்கியமாக தற்சமயம் அவர் ரஜினியை வைத்து இயக்கி வரும் கூலி திரைப்படமும் எல்.சி.யு வில் வருகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
லோகேஷ் கனகராஜ் கொடுத்த விளக்கம்:
இந்த நிலையில் இது குறித்து பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக ரஜினி நடிக்கும் கூலி திரைப்படம் எல்.சி.யுவில் வராது அந்த திரைப்படம் தனிப்பட்ட படமாக தான் வரும். ஏனெனில் ஒரு எல்.சி.யு என்பது சாதாரண விஷயம் கிடையாது.
ஒரு நடிகரை எல்.சி.யுவில் சேர்க்க வேண்டும் என்றாலும் கூட ஏற்கனவே இதில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களிடம் சென்று நான் ஒப்புதல் வாங்க வேண்டும். அவர்களெல்லாம் ஒப்புக்கொண்டால் மட்டுமே அவர் படத்தில் நடிக்க முடியும்.
அதனால் இஷ்டப்பட்ட எல்லா கதாநாயகர்களையும் இதில் இணைத்து விட முடியாது என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால் அடுத்து வரும் திரைப்படங்கள் எல்லாமே எல்.சி.யுவில் இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.