விஜய்க்கு கட்சி ஆரம்பிச்சு பேச என்ன தகுதி இருக்கு..! கடுப்பான பெண் பிரபலம்!.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை துவங்கியது முதலே அவரது நடவடிக்கைகளை மக்கள் கண்காணித்து கொண்டே இருக்கின்றனர். தமிழக வெற்றி கழகம் கட்சியை துவங்கிய பிறகு விஜய் செய்யும் விஷயங்களும் அதிக வைரலாகி வருகின்றன.

கட்சி துவங்கி விஜய் என்ன செய்துவிட போகிறார் என பலருமே நினைத்து வந்த நிலையில் விஜய் தொடர்ந்து மற்ற கட்சிகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து விஜய் எந்த கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு பேசுவதே இல்லை என ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பொது கூட்டத்தில் பேசி விஜய் அனைவரையும் பெயர் சொல்லி நேரடியாக தாக்கி பேசியிருந்தார். இந்த நிலையில் தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலெட்சுமி விஜய்க்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

vijay
vijay
Social Media Bar

அதில் அவர் கூறும்போது விஜய் போதை பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார். அதை பற்றியெல்லாம் பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது. சினிமா பாடகியான சுசித்ரா விஜய் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.

அதாவது விஜய் தனது இல்ல நிகழ்ச்சியில் நடிகைகளுக்கு உயர் ரக போதை பொருளை கொடுத்தார் என கூறியிருந்தார் சுசித்ரா. இந்த நிலையில் விஜய் கட்சி துவங்கி இவை பற்றியெல்லாம் பேச என்ன தகுதி இருக்கிறது என கேட்டுள்ளார் வீரலெட்சுமி.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.