Tamil Cinema News
அரசு சொத்தை கேட்ட விக்னேஷ் சிவன்.. புதுச்சேரியை சுற்றி வர இதுதான் காரணமாம்.!
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் சொத்து வாங்க நினைத்தது தொடர்பான விவகாரம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது. புதுச்சேரிக்கு சென்று விக்னேஷ் சிவன் அரசுக்கு சொந்தமான சொத்தை வாங்க நினைத்தது குறித்த விஷயம் தான் பேசப்பட்டது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தை புதுச்சேரியில்தான் படமாக்கினார். அப்பொழுது அவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. எனவே அவர்களது காதலுக்கும் புதுச்சேரிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.
புதுச்சேரியில் தனது காதலை ஞாபகப்படுத்தும் வகையில் நயன்தாராவிற்கு ஒரு பரிசளிக்க வேண்டும் என்று நினைத்த விக்னேஷ் சிவன் ஒரு ஹோட்டல் வாங்க நினைத்தார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தது.
இதுதான் காரணம்:
இந்த நிலையில் சிகல்ஸ் ஓட்டலை வாங்குவதற்காக பாண்டிச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சரிடம் பேசினார் விக்னேஷ் சிவன். ஆனால் அரசியல் சொத்துக்களை அப்படியே விற்பனை செய்வது கிடையாது. மேலும் உணவகம் சீகல்ஸ் ஹோட்டல் ஆனது நல்லபடியான லாபத்தை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் இதன் பின்னணி என்ன என்று பார்க்கும் பொழுது இதன் பின்னால் வேறு ஒரு விஷயம் இருப்பது தெரிகிறது. அதாவது ஹோட்டலில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு விக்னேஷ் சிவன் நினைத்திருக்கிறார்.
அதற்காகத்தான் அந்த உணவகத்தை கேட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது ஆனால் அந்த ஹோட்டலில் அதற்கெல்லாம் அனுமதி கிடையாது என்று கூறிய சுற்றுலாத்துறை அமைச்சர் பிறகு பாண்டிச்சேரியிலேயே வேறொரு இடத்தை விக்னேஷ் சிவனுக்கு பரிந்துரை செய்திருக்கிறார் ஆனால் விக்னேஷ் சிவன் இன்னும் அது குறித்து எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.